பாலமேட்டில் நடந்துமுடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 18 காளைகளை அடக்கிய வீரர் கருப்பாயூரணி கார்த்திக்கு முதல்பரிசாக கார் வழங்கப்பட்டது.
தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு, மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியை கொடியசைத்து, தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக காளைகள் சீறிப்பாய்ந்தன. 8 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 674 காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் கருப்பாயூரணி கார்த்திக் என்பவர், 18 மாடுகளை பிடித்து முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கபபட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்போட்டியில் 17 காளைகளை பிடித்த மாடுபிடி வீரரான பிரபாகரன் 2 ஆம் இடம் பிடித்தார். பிடிபடாமல் நின்று விளையாடிய பாலமேடு யாதவர் உறவின்முறையைச் சேர்ந்த காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
ஜல்லிக்கட்டின் போது 12 மாடுபிடி வீரர்கள், 7 உரிமையாளர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.