10 நாட்களில் ரூ.700 கோடி வசூலை கடந்த ‘அனிமல்’ திரைப்படம்!

‘அனிமல்’  திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் ரூ. 700 கோடி வசூலை கடந்துள்ளதாகவும்,  விரைவில் ரூ.1000 கோடி வசூலை அடையும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர்…

‘அனிமல்’  திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் ரூ. 700 கோடி வசூலை கடந்துள்ளதாகவும்,  விரைவில் ரூ.1000 கோடி வசூலை அடையும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது.  பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்,  ராஷ்மிகா  மந்தனா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது.  படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.

இந்த திரைப்படம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது.  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். நடிகர் அல்லு அர்ஜுன் படத்தினை “கிளாசிக்” என்று புகழ்ந்துள்ளார்.  ரசிகர்களின் பேராதரவில் சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

படம் வெளியான 9வது நாளின் முடிவில் ரூ.660. 89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.  இந்நிலையில்,  10வது நாளில் ரூ.717.46 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.  அடுத்த வாரமும் இதே வேகத்தில் சென்றால் நிச்சயமாக 1000 கோடி ரூபாயை வசூலிக்குமென ரன்பீர் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.