மாமூல் கேட்டு மிரட்டியது குறித்து போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரம்…. பிரியாணி கடையை சூறையாடிய கும்பல்…

மாமூல் கேட்டு மிரட்டியதை போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த கும்பல், பிரியாணி கடையை சூறையாடினர். சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் சதீஷ்.  இவர் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் பிரியாணி கடை நடத்தி…

மாமூல் கேட்டு மிரட்டியதை போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த கும்பல், பிரியாணி கடையை சூறையாடினர்.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் சதீஷ்.  இவர்
ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.  இந்த நிலையில் வேளச்சேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணி என்ற பாட்டில் மணி என்பவர் தினமும் இவரது கடைக்கு வந்து ஓசியில் பிரியாணி மற்றும் மாமூல் கேட்டு மிரட்டி சென்றதாக
கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,  பாட்டில் மணி கடந்த 11-ம் தேதி பிரியாணி கடையில் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதையடுத்து பிரியாணி கடையின் உரிமையாளர் சதீஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  காவல் நிலையத்தில், புகார் அளித்தது பாட்டில் மணிக்கு தெரிய வந்தது.

இதனால் கோபமடைந்த பாட்டில் மணி,  தனது நண்பர்களுடன் வந்து,  பிரியாணி கடையை சூறையாடியதுடன்,  உரிமையாளர் சதீஷூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இந்த சம்பவத்தை கடை ஊழியர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.  இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.