கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துமாவு பொருட்களை தூக்கி வீசிய ஒப்பந்ததாரர்!

கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய சத்து மாவு மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவு உணவு பொருட்களை அனுமதி பெறாமல் அங்கன்வாடி கட்டிடத்தில் வைத்ததால் ஒப்பந்ததாரர் பொருட்களை வெளியில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர்…

கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய சத்து மாவு மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவு உணவு பொருட்களை அனுமதி பெறாமல் அங்கன்வாடி கட்டிடத்தில் வைத்ததால் ஒப்பந்ததாரர் பொருட்களை வெளியில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் ஊராட்சி ஆலப்பெரியாணுர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடம் சமீபத்தில் கட்டி  முடிக்கப்பட்டுள்ளது.
பணி முடிந்ததாக கூறி அங்கன்வாடி மையத்தின் ஊழியர்கள் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள்,  விளையாட்டுப் பொருட்கள், கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய  சத்துமாவு ஆகியவற்றை புதிய கட்டிடத்தில் வைத்துள்ளனர். முறையான அனுமதி பெறாமல் உள்ளே வைத்ததாகக் கூறி, ஒப்பந்ததாரர் மணி என்பவர் அனைத்து பொருட்களையும் அங்கன்வாடி மையத்தின் வெளியில் தூக்கி வீசினார்.
கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்து பொருட்களைத் தூக்கி வெளியில் வீசியதால் உதவியாளர் ராஜலட்சுமி பொருட்களைப் பாதுகாத்து அந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார். அங்கன்வாடி மைய ஊழியர்கள் உணவுப் பொருட்களை வழங்காததால்,  கடும் வெயிலில் நடந்து வந்த கர்ப்பிணி பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.