ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு இந்த முன்னாள் ஜாம்பவான்தான் பயிற்சியாளர்

ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது…

ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் உள்ளன. நடப்பு ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி, கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அடுத்தாண்டு முதல் ஐபிஎல்-லில் புதிதாக அகமதாபாத், லக்னோ என 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி நிறுவனமும் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் பார்னர்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கே.எல்.ராகுல், லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் என்று அப்போது அழைக்கப்பட்டவர். பத்து வருடங்களுக்கு முன் இங்கிலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன்னாக இருந்தபோதும், காலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து அணி 2010 ஆம் ஆண்டில், டி-20 உலகக் கோப்பையை வென்றபோதும் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் 12 வருடங்களாக பல்வேறு பயிற்சியாளர் பதவிகளில் பொறுப்பேற்று வந்த ஆண்டி பிளவர், ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.