தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு பவன் கல்யாண் வாழ்த்து!

தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் விஜய்க்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில்…

தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் விஜய்க்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் அறிமுக பாடல், கொடியை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார். தொடர்ந்து தவெகவின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைப்பெற்றது. இதில் தவெகவின் பெயர்க்காரணம், கட்சியின் கொள்கைப்பாடல், கொடியின் நிறம், தவெகவின் நிலைப்பாடு, கோட்பாடுகள், கட்சியின் கொள்கைகள் போன்றவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார். மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அரசியல்வாதியாக அனல்பறக்க நேற்று விஜய் உரையாற்றி இருந்தார். இவரது இந்த பேச்சு குறித்து பல அரசியல் தலைவர்களும், நடிகர்களும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விஜய் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“துறவிகளும், சித்தர்களும் அதிகம் வாழ்ந்த தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் விஜய்க்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.