தமிழ்நாட்டில் குலதெய்வம் கோயிலில் வழிபட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா

திரைப்பட நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, உத்திரமேரூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார். நடிகை ரோஜாவின் கணவரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியின் குல தெய்வம் கோயில் உத்திரமேரூரை…

திரைப்பட நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, உத்திரமேரூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

நடிகை ரோஜாவின் கணவரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியின் குல தெய்வம் கோயில் உத்திரமேரூரை அடுத்த திருமுக்கூடலில் உள்ளது. அங்குள்ள செல்வமணியின் குலதெய்வம் கோயிலான ஸ்ரீ  செல்வி அம்மன் ஆலயத்திற்கு திரைப்பட நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா, கணவர் செல்வமணியுடன் சென்றார்.

அங்கு செல்வ அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து இருவரும் பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.  குல தெய்வம் கோயில், அமைச்சர் ரோஜா மற்றும் அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான  ஆர்.கே.செல்வமணியுடன் வழிபட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவராக திகழும் ரோஜா, தற்போது அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஸ்ரீ செல்வி அம்மன் ஆலயத்தில் வழிபாடு

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வரும் ரோஜா, தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள நகரி தொகுதியில் இருந்து  ஆந்திர சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.