ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அனபர்தி அருகே, மினி லாரியில் ஏற்றி வந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அனபர்தி அருகே உள்ள மெடப்பாடு கிராமம் வழியாக, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது, மினி லாரியில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவத்தில், மினி வேனின் பின்பகுதி முழுவதும் சேதமடைந்தது. மேலும், வேனின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். இதையடுயத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மினி வேனில் ஆக்சிஜன் வெடித்த சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளது.