முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்

அண்ணாத்த திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியீட்டின் போது ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள் மீதும், அதை கண்டிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வெள்ளியன்று நடிகர் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை கொண்டாடும் விதமாக ரஜினி கட் அவுட்டிற்கு ரஜினி ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

 

இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் ரஜினி ரசிகர்களின் செயல் ஆயுத கலாச்சாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்த செயலிற்கு நடிகர் ரஜினி தரப்பில் எந்த வித கண்டன அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் அபிஷேகம் செய்த நபர்கள் மீதும், ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

மே 5ம் தேதி முதல்வராகப் பதவியேற்கும் மமதா பானர்ஜி

Halley karthi

லீ மெரிடியன் ஹோட்டல் சொத்துக்களை எம்ஜிஎம்க்கு மாற்ற தடை

Saravana Kumar

கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan