நாகப்பட்டினம் அருகே, மதுபோதையில் அரசு பேருந்தை ஒட்டுநர் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து, பாலக்குறிச்சி கிராமத்திற்கு, செல்லும் அரசு நகரப் பேருந்தை, ஓட்டுநர் செல்லமுத்து என்பவர் இயக்கினார். நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்ட பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்து வந்து நின்றுள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள், பேருந்து ஓட்டுநரை கீழே இறக்கிப் பார்த்தபோது, அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் உடனடியாக நாகப்பட்டினம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் செல்லமுத்துவை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பணிமனை கிளை பொறியாளரும், கிளர்க்கும் காவல்நிலையத்திற்கு வந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி ஓட்டுநரை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.







