தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு! நெற்றியில் காயம்!

தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.  ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர்…

தேர்தல் பரப்புரையின் போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. 

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருக்கும் போது கூட்டத்திலிருந்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சரும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜெகன் மோகன் ரெட்டி தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில், பேருந்தில் பயணித்துக் கொண்டே தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து கொண்டு, கற்கள் மூலம் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

இதனால், முதலமைச்சர் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி அளித்தனர். இதையடுத்து மீண்டும் தேர்தல் பயண யாத்திரையை தொடர்ந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.