ஆந்திர மாநிலம் சீதாராம ராஜூ மாவட்டத்திலுள்ள பாடோரு மலைப்பாதையில் 100அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சீதாராமராஜு மாவட்டத்திலுள்ள சோடவரம் எனும் பகுதியில் இருந்து பாடேறு எனும் பகுதிக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று 49 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது.
பேருந்தானது பாடேறு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தப்போது எதிர்பாரதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இவ்விபத்தில் உயிரிழந்த நிலையில் இருவர் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் இருபது பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.இவ்விபத்து குறித்து பாடேறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேந்தன்







