நடிகை சமந்தாவின் மிகப்பெரிய ரசிகன் தான் எனவும், கதை இருந்தால் நிச்சயம் அடுத்த முறை அவருடன் நடிக்க தயாராக உள்ளதாகவும் நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த குஷி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் நடிகர் விஜய் தேவரகொண்டா கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செப்டம்பர் 1ம் தேதி குஷி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது எனவும், இதில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
காதல் கதை சார்ந்த படமாக குஷி படம் உருவாகி உள்ளது எனவும், தமிழ், தெலுங்கு படங்களை பொருத்தவரை பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். தமிழில் விஜய் நடித்த குஷி படமும் தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த குஷி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது என தெரிவித்த அவர், நீ தானே என் பொன்வந்தம் போன்ற படங்களை பார்த்துள்ளேன், சமந்தாவின் ரசிகன் நான் எனவும் தெரிவித்தார்.
பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எஃப் போன்ற படங்கள் மிகப்பெரிய படங்கள் என தெரிவித்த அவர், குஷி குடும்பங்களுடன் வந்து பார்க்க கூடிய படமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக குஷி படத்தில் வரக்கூடிய பாடல்களை ரசிப்பார்கள் என தெரிவித்த அவர், ஸ்கிரிப்ட் இருந்தால் நிச்சயம் அடுத்த முறை சமந்தாவுடன் நடிக்க தயாராக உள்ளேன் எனவும் தெரிவித்தார்.
மாவீரன் படம் நேற்றைய தினம் பார்த்ததாகவும், படம் மிகவும் பிடித்தது எனவும், சிவ கார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார் எனவும் தெரிவித்த அவர், தமிழில் லோகேஷ், நெல்சன் ஆகியோர் சிறந்த இயக்குநர்கள் எனவும், இயக்குனர் வெற்றிமாறன் எனக்கு மிகவும் பிடிக்கும், அவரின் அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்ற குஷி பட ப்ரோமோஷன் நிகழச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா செய்தியாளர் சந்திப்பு@Samanthaprabhu2 | @TheDeverakonda | #Kushi | #Movie | #Promotion | #pressmeet | #Coimbatore | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/VUWnSuDaXw
— News7 Tamil (@news7tamil) August 21, 2023
காலா, கபாலி போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் முரளி இந்த படத்திலும் எங்களுடன் இணைந்துள்ளார் என தெரிவித்த அவர், ஜெயிலர் படம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் படத்தின் ரிவ்யூ நன்றாக உள்ளது எனவும், ஜெயிலர் படம் அதிகமான வசூல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தார். சினிமா துறையில் திறமை என்பது அவசியமானது எனவும், திறமையின் மூலம்தான் சினிமா துறை பயணிக்கிறது எனவும், அந்த பார்வையில் தான் நான் இத்துறையை பார்க்கின்றேன் எனவும் விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.







