அரியலூர் – சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில் வரை இரண்டு நாள் நடைபயணம் மேற்கொள்கிறார்.
அரியலூர் – சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கீழப்பழுவூர் முதல் காட்டுமன்னார்கோயில் வரை அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிரச்சார எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
அண்மையில் தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஒகேனக்கலில் மூன்று நாள் நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். இதற்கு கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து, நாளை அரியலூர் – சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி கீழப்பழூரில் நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் நடைபயணம் த.பழூர் பகுதியில் இரவு முடிவடைகிறது. நாளை மறுநாள் அரியலூரில் காலை 9 மணிக்கு தொடங்கும் நடைபயணம் காட்டுமன்னார்கோவிலில் நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைபயணத்தின் போது, மக்களுக்கு அரியலூர் – சோழர் பாசனத் திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகளை சந்தித்துப் பேசவும் அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். இந்த நடைபயணத்தில் அரசியல் நிலைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.








