நடிகர் ஹரீஷ் கல்யாணின் திருமணம் சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். இவர் தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற பல்வேறு படங்களில் நடித்தார். 
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்து தகவலை அண்மையில் தெரிவித்தார். நர்மதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக புகைப்படத்தையும் வெளியிட்டார். 
இந்நிலையில் இவர்களது திருமணம் திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இந்து முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் மனைவி நர்மதா கழுத்தில் ஹரிஷ் கல்யாண் தாலி கட்டினார்.
பெற்றோர், உறவினர்கள் புடைசூழ நடைபெற்ற திருமணத்தில் தாலி கட்டி முடிந்த பின்பு ஹரிஷ்கல்யாண் அன்பு முத்தத்தை மனைவிக்கு பரிசாக அளித்தார். திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.







