முக்கியச் செய்திகள் தமிழகம்

சோழர் கால பாசன திட்டத்தை மீட்டெடுக்க அன்புமணி நடைபயணம்

சோழர் கால பாசன திட்டத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கியுள்ளார். 

அரியலூர்- சோழர் கால பாசன திட்ட ஏரி, குளங்களை மீண்டும் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சார நடைப்பயணத்தை தொடங்கினார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், சோழ மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் தெற்காசியாவை தனது கொடையின் கீழ் கொண்டு வந்து, கங்கை வரை படையெடுத்து கங்கை நீரை கொண்டு வந்து சோழ கங்கம் என்ற மிகப்பெரிய ஏரியை தோற்றுவித்த ராஜேந்திர சோழன் விவசாய பாசனத்திற்கு சோழர்கள் முக்கியத்துவம் அளித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காவிரியில் சோழ மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றளவும் நிலைத்து நின்று தஞ்சை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை டெல்டா பகுதிகளாக விளங்க காரண கர்த்தாவாக உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கண்டிராதீர்த்தம் ஏரி, கரைவெட்டி ஏரி, சுக்கிரனேரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன பரப்புள்ள பெரிய ஏரிகளையும், சுத்தமல்லி நீர்த்தேக்கம், பொன்னேரி உள்ளிட்ட பல பாசன ஏரிகள் மூலம் பல லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

நாளடைவில் ஏரிகள் ஆக்கிரமிப்பாளும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாத காரணத்தினாலும் விவசாய பகுதி குறைந்துபோனது என்று குறிப்பிட்டார். எனவே இதனை மீட்டெடுத்து சோழர்கால ஏரிகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

கீழப்பழூர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பிரச்சார எழுச்சி நடை பயணத்தை
தொடங்கியுள்ள அன்புமணி ராமதாஸ் இன்று கீழப்பழூர், கண்டிராதித்தம், திருமானூர்,
ஏலாக்குறிச்சி தூத்தூர், குருவாடி, கோவிந்தபுத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக
நடைபயணம் சென்று தா.பழூரில் இன்றைய நடைபயண பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

நாளை காலை அரியலூரில் தொடங்கி வாலாஜா நகரம், வி.கைகாட்டி, யங்கொண்டம்
வழியாக காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் தனது பிரச்சார நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram