ஐபிஎல்-2027 : சிஎஸ்கே அணியில் இணைந்த லியாம் லிவிங்ஸ்டோன், ஜாக் எட்வர்ட்ஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரை டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வாங்கியுள்ளது.

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜாக் எட்வர்ட்ஸை டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இதற்குப் பதிலாக கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடைபெறும் கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸுக்கு, அவர்களின் அடுத்தகட்ட கிரிக்கெட் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.6 கோடிக்கும், ஜாக் எட்வர்ட்ஸை ரூ.3 கோடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல், கலீல் அகமது ரூ.4.8 கோடிக்கும், நாதன் எல்லிஸ் ரூ.2 கோடிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறியுள்ளனர்.

லியாம் லிவிங்ஸ்டோன்:

இங்கிலாந்து அணிக்காக 100 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள லியாம் லிவிங்ஸ்டோன், 1,500-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 51 போட்டிகளில் விளையாடி, 1,000-க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். மேலும், 155-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டுள்ளார்.

ஜாக் எட்வர்ட்ஸ்:

26 வயதான ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான ஜாக் எட்வர்ட்ஸ், டி20 கிரிக்கெட்டில் 865 ரன்களைக் குவித்துள்ளதுடன், 58 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான இவர், முதல்தர கிரிக்கெட்டில் சுமார் 2,500 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் அடங்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.