கோவையில் சர்வதேச கிரிக்கெட் திடல் அமைக்கப்படும்! -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி

சேப்பாக்கம் மைதானம்போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் மேலும் வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில்…

சேப்பாக்கம் மைதானம்போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளில் மேலும் வாக்குறுதி சேர்க்கப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சரின் மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், #Elections2024க்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன்:

கோவை மாநகரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் பங்களிப்புடன், கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். எமது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார், இந்த மைதானம் சென்னையின் சின்னமான MAC ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச-தரமான கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும்.

நமது அரசும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ள்ளார்” என தெரிவித்துள்ளார்.

 

https://twitter.com/mkstalin/status/1776868797582123516?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1776868797582123516%7Ctwgr%5Ed191adf8c11223cf143300527b0b63b9e8035b3e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.seithisolai.com%2Fcoimbatore-e0ae95e0af8be0aeb5e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d-e0ae9ae0aeb0e0af8de0aeb5e0aea4e0af87e0ae9a-e0ae95e0aebfe0aeb0e0aebfe0ae95%2F

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.