ஆண்டுக்கு 1.8 கோடி சம்பளம் வாங்கும் இந்தியர்!

சாதாரண குடும்பத்தை சார்ந்த  இந்திய இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் சம்பளத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.  ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்காமல், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

சாதாரண குடும்பத்தை சார்ந்த  இந்திய இளைஞர் ஒருவர் ஆண்டுக்கு 1.8 கோடி ரூபாய் சம்பளத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 

ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்காமல், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் ஒருவர் ஆண்டுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளார் ஏழைத்தாயின் மகன் ஒருவர். அவரை பற்றி இந்த பதிவல் காண்போம்.

இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே , கோடிகளில் சம்பளம் கிடைக்கும் என்ற பிம்பத்தை சமீப காலமாக பல கல்லூரி மாணவர்கள் உடைத்து வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைகழக மாணவர் பிசாக் மண்டல், பேஸ்புக் நிறுவனத்தில் ஆண்டுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் சம்பளத்தில், இங்கிலாந்து நாட்டின், லண்டனில் பணியில் சேர்ந்துள்ளார் .

கொல்கத்தாவைச் சேர்ந்த பிசாக் மண்டல், ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் கணிணி அறிவியலில் பட்டம் பெற்றவர். எந்த ஒரு பொருளாதார பின்புலமும் இன்றி , அங்கன்வாடியில் பணியாற்றும் தமது தாயின் ஆதரவில், நன்றாக படித்து இந்த உயரத்தை எட்டியுள்ளார்.

பொறியியல் படித்தாலும் நல்ல வேலை கிடைக்காமல் அதிக சிக்கல்களையும் எதிர் கொண்டதாகவும், கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்த 2 ஆண்டுகள், பல நிறுவனங்களில் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும் பணியாற்றி , பெரு நிறுவனங்களில் சேரும் அளவிற்குத் திறமையை வளர்த்துக் கொண்டதாக் தெரிவிக்கிறார் பிசாக் மண்டல்.

அதேபோல் ஓரே நேரத்தில் கூகுள், பேஸ்புக், அமேசான் ஆகிய 3 நிறுவனங்களில் பணிக்கு தேர்வானதும் எளிதான காரியமில்லை. இதற்கு மிக அதிகப்படியான அளவு படிப்பில் கவனம் செலுத்தியதே முக்கிய கரணம் எனவும் கூறுகிறார். என்னதான் கொரோனா தொற்றுக் காலத்தில் கேம்பஸ் இண்டர்வியூ நடக்கவில்லை என்றாலும், சந்தையில் திறமையான பட்டதாரிகளுக்கு அதிகப்படியான தேவை இன்னமும் அப்படியே உள்ளது என்று உறுதியாக கூறுகிறார்.

இதற்கு முன்பு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், 1 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மத்திய பல்கலைகழகங்களில் படித்தால் தான் நல்ல சம்பளம்,நல்ல அந்தஸ்து, வெளிநாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளில் இடம் பெறமுடியும் என்ற மாய பி்ம்பத்தை தகர்த்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர், மீண்டும் மாநில அரசு பல்கலைக்கழக மாணவர்கள். இந்த வெற்றிகள் தொடரட்டும்.

– ரா.தங்கபாண்டியன்,நியூஸ்7தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.