நியாயவிலைக்கடைகள் எண்ணிக்கை அதிகரிப்பு? – அமைச்சர் ஐ.பெரியசாமி

திருப்பூரில் நியாயவிலைக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில்…

திருப்பூரில் நியாயவிலைக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.

திருப்பூரில் நியாயவிலைக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா எனத் திருப்பூர் தெற்கு உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திருப்பூரில் நியாயவிலைக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 1000 அட்டை உள்ள நியாயவிலைக்கடைகளை பிரிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் 150 ரேசன் அட்டைகளுக்குப் பகுதி நேர கடைகளும், 200 ரேசன் அட்டைகளுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.