கமுதி அருகே இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளை காண வந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இந்திய தேசிய கொடியுடன் வயலில் இறங்கி கிராம பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளை வயலில் இறங்கி அமெரிக்கர்கள் ஆய்வு செய்தனர். அவர்களை அப்பகுதி விவசாயப் பெண்கள் குலவையிட்டும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, ஆய்வு செய்ய வந்த அமெரிக்கப் பெண், இந்திய தேசியக் கொடியுடன் வயலில் இறங்கி, தமிழ்நாட்டு பெண்களுக்கு இணையாக குலவையிட்டு, தமிழர்களின் பாரம்பரிய முறையை அனுபவித்து அசத்தினார்.
முன்னதாக அமெரிக்க விவசாயிகளுக்கு அப்பகுதி இயற்கை விவசாயி ராமர், தனது வயலில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய், வாழை போன்றவற்றை காண்பித்து, சாகுபடி முறை மற்றும் இயற்கை உரமிடுதல் குறித்து விளக்கம் அளித்தார். அனைத்தையும் ஆய்வு செய்த பின்னர், 200 டன் மிளகாயை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கர்கள் ஒப்புதல் அளித்தனர்.