“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” – நயினார் நாகேந்திரன்!

உலகத் தமிழர் அனைவருக்கும் என் இனிய தாய்மொழி தின வாழ்த்துக்களை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!

என்ற முண்டாசு கவிஞன் பாரதியாரின் வரிகளை போற்றும் வகையில் இன்று உலகத் தாய்மொழி தினத்தில் உலகத் தமிழர் அனைவருக்கும் என் இனிய தாய்மொழி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தாய்மொழி என்பது சொற்கள் மட்டும் அல்ல, அது நம் சிந்தனை, பண்பு, வரலாறு மற்றும் உணர்வுகளின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம் அதை காக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. நம் தாய்மொழியை நேசித்து, பேணி வளர்த்தால் தான் நம் அடையாளம் என்றும் நிலைத்திருக்கும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.