மேகதாது: கர்நாடகாவை கண்டித்து அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து வரும் 6ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை…

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து வரும் 6ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேகதாது இடத்தில் அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசு

வரும் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.