தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஆகிய மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, தேனி ஆகிய இருமாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.







