தசரா திருவிழாவை முன்னிட்டு அம்மன் சப்பர பேரணி – திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில், அம்மன் சப்பர பேரணி நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள அம்மன் ஆலயங்களில் கடந்த 10 நாட்களாக தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.…

தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில், அம்மன் சப்பர பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள அம்மன் ஆலயங்களில் கடந்த 10 நாட்களாக தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அம்மன் ஆலயங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயம் முன்பு 500 மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து அங்கு இந்து முன்னணி சார்பில் அம்மன் சப்பர பேரணி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் : பாக்ஸ் ஆஃபீசை அலற விட்ட ‘லியோ’ – சாதனை மேல் சாதனை..! 

தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள உச்சி மாகாளியம்மன், சந்தன மாரியம்மன், பத்திரகாளியம்மன் உள்ளிட்ட பல அம்மன் ஆலயங்கள் சார்பில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளினார். ஒயிலாட்டம், கரகாட்டம்,  சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள் விளையாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக வர, அம்மன் ஆலயங்களின் சப்பர பேரணி நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.