உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் : மமதா பானர்ஜி

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதியும்…

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த 1-ஆம் தேதியும், 3-ஆம் கட்டத் தேர்தல் கடந்த 6-ஆம் தேதியும் நடைபெற்றன.

இதையடுத்து, 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 44 தொகுதிகளிலும் பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில், கூச் பெஹார் மாவட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி கூறியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியை, நேரில் பார்வையிட உள்ளதாகவும், துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பேரணி நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.