புகழ்பெற்ற ‘ரஸ்புடின்’ பாடலுக்கு கேரளாவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவியும், மாணவரும் ஆடிய நடனம் வைரலாகி வருகிறது.
போனி எம் இசைக்குழுவின் பிரபல பாப் பாடலான ’ரஸ்புடின்’ பாடலுக்கு கேரளாவின் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர் நவீன் ரசாக்கும், மூன்றாம் ஆண்டு மாணவி ஜானகி ஓம்குமாரும் உற்சாகமாக கல்லூரியில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டனர்.
’ரஸ்புடின்’ பாடலுக்கு ஏற்ப இவர்களின் சுறுசுறுப்பான உற்சாகமான நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுக்களைக் குவித்தது வருகிறது. இரண்டு பேரும், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், லவ் ஜிகாத் என பாஜகவினர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களின் நடனத்தை பாராட்டி, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள், ட்விட்டரில் பகிர்ந்து வருவதால், அந்த மாணவர்களுக்கு ஆதரவும், பாராட்டும் குவிந்து வருகிறது.







