பயிர் சாகுபடிக்கான முக்கியக் கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்துள்ளார்.
பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் முக்கியக் கூட்டு உரங்களின் விலையை, உர உற்பத்தி நிறுவனங்கள் திடீரென 60 சதவீதம் வரை உயர்த்தின. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மத்திய உரத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக உர தயாரிப்பு நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், உரங்களின் விலை உயர்வை தற்போது, நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறியுள்ள அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, விவசாயிகள் பழைய விலைக்கே உரங்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.







