அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார் அமித்ஷா!!!

என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா…

என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 2 நாள் பயணமாக ராமேஸ்வரத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் மதுரை வந்த அவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மண்டபம் கடற்படை முகாமிற்கு புறப்பட்டார். பிறகு, சாலை வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்தார்.

ராமேஸ்வரத்தில் என் மண், என் மக்கள் நடைபயண தொடக்க விழாவில் அமித்ஷா பங்கேற்று பேசினார். இந்த தொடக்கவிழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனை அடுத்து நடைபயணத்தை கொடியசைத்து அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அமித்ஷா, அண்ணாமலை, எல்.முருகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் நடைப்பயணத்தில் நடந்து சென்றனர்.

என் மண், என் மக்கள் என்ற தலைப்பிலான இந்த நடைபயணம், 234 சட்டமன்ற தொகுதிகளிலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், ஆயிரத்து 700 கிலோமீட்டர் தொலைவு நடைபயணமும், 900 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகன பிரசாரமும் மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.