சூப்பர் ஸ்டார் பட்டம்…. ரஜினிகாந்த் சொன்ன குட்டிக் கதை… ”நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்!”

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ரசிகர்கள் எல்லோரும் ரஜினி என்ன பேச போகிறார் என்று தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில்,…

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ரசிகர்கள் எல்லோரும் ரஜினி என்ன பேச போகிறார் என்று தான் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:

நெல்சனை மாற்றச் சொன்னாங்க

நெல்சன் எனக்கு ஒரு கதை சொன்னார். எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்குனு சொன்னேன். பீஸ்ட் ஷூட்டிங் முடிந்து 10 நாள்களில் விரிவாக கதை சொல்வதாக கூறினார். 10 நாளைக்குப் பின் பீஸ்ட் ஷூட் முடிஞ்சு வந்து கதை சொன்னார் . அற்புதமாக இருந்தது.

ப்ரோமோ ஷூட் செய்து படத்தை அறிவித்தோம். அதன் பிறகு பீஸ்ட் வெளியானது. பீஸ்ட் எதிர்மறையான விமர்சனங்களைக் கொண்டிருந்தது. அது சரியாகப் போகவில்லை. இயக்குனரை மாற்றுமாறு விநியோகஸ்தர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன.

நாங்கள் அனைவரும் சன் டிவி குழுவுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம். சன் டிவி டீம் சொன்னது, உண்மைதான் சார். விமர்சனங்கள் மோசமாக உள்ளன. ஆனால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் இல்லை, பாக்ஸ் ஆபிஸில் நன்றாக இருக்கிறது என்று சன் டிவி டீம் என்னிடம் கூறியது. இந்தப் படம் பாட்ஷா மாதிரி இருக்குமானு தெரியல, ஆனா அதுக்குலாம் மேல இருக்கும். நீங்க தான் பாத்துட்டு சொல்லணும்.

முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் போன்ற இயக்குநர்கள் என் கேரியரை உயர்த்தியவர்கள்; இப்போது நெல்சனும் இந்தப் பாதையில் இருக்கிறார்.

நான் முதல் முறை ஹுக்கும் பாடல் வரிகள் பார்த்தபோது தாறுமாறாக இருந்தது. அப்போது ஒன்றே ஒன்று சொன்னேன். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் அதிலிருந்து எடுக்க சொன்னேன்.

சூப்பர் ஸ்டார் பட்டம் என்னைக்குமே தொல்லைதான். நான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க நீண்ட காலத்திற்கு முன்பே கேட்டேன். அப்போது சிலர் ரஜினி பயந்துவிட்டதாக கூறினார்கள். நான் இரண்டு பேருக்கு மட்டுமே பயப்படுகிறேன்.

ஒன்று கடவுளுக்கு. மற்றொன்று நல்ல மனிதர்களுக்கு. நல்லவங்களோட சாபம் எப்போதும் நம்மை காயப்படுத்தும். நல்லவர்களை நாம் புண்படுத்தக் கூடாது. நல்லவர்களுக்கு பயப்பட வேண்டும்.

இதனை தொடர்ந்து காவாலயா பாடல் ஹூட்டிங் பற்றி பேசிய ரஜினிகாந்த், ஆறு நாட்கள் மட்டுமே இருந்தன; காட்சிகள் முடிக்கப்பட்டுவிட்டன. நான் ‘காவலயா’ பாடல் ஷூட்டிற்காக காத்திருந்தேன். முதல் மூன்று நாட்கள் எனக்கு கால் வரவேயில்லை.நான் கண்ணனிடம் கேட்டேன். அப்போது அவர்கள் ‘ நாளைக்குதான் ஷூட்டிங். அதுவும் ஒரு ஸ்டெப் என்றார்கள். ஜானி மற்றும் தமன்னா அந்தப் பாடலில் அசத்தியிருக்கிறார்கள்.

குட்டிக்கதை….

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் குட்டிக்கதை ஒன்றை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

பறவைகளில் காகம் எப்போதும் பலருக்கும் தொல்லை கொடுக்கும். ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை தராது. கழுகை கூட காகம் டிஸ்டர்ப் செய்யும், ஆனால் கழுகு எதுவுமே செய்யாது. அது அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும். காகம் அதற்கு போட்டியாக ஒரு கட்டம் வரை வரும், ஆனால் அதனால் அதிக உயரம் பறக்க முடியாது.

நான் காக்கா கழுகுனு சொன்ன உடனே.. இவரை தான் சொல்றேன்னு சோசியல் மீடியால சொல்லுவாங்க. குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலைய பாத்துட்டு நேரா போயிட்டே இருக்கனும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

காவாலா பாடலில் ஆடாதது, சூப்பர் ஸ்டார் பட்டம் என ரஜினிகாந்த் மீது முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.