முக்கியச் செய்திகள் உலகம்

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்யா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. போரில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உக்ரைனின் 2வது தலைநகரான கார்கிவ் நகரை ரஷ்யா கைப்பற்றி இருந்தது. இதையடுத்து கடுமையான போராட்டத்திற்கு பிறகு ரஷ்ய படைகளை வென்று கார்கிவ் நகரை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளது. பின்னர் கார்கிவ் நகரில் ஏற்றப்பட்டிருந்த ரஷ்ய கொடியினை தீயிட்டு கொழுத்திய உக்ரைன் ராணுவம், உக்ரைன் கொடியை ஏற்றியது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதுபற்றி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் செய்தி தொடர்பாளர் செர்ஹை நிகிபோரோவ் தனது பேஸ்புக் பதிவில், அதிபரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக ஜெலன்ஸ்கிக்கு பரிசோதனை செய்தனர். அவருக்கு லேசான காயமே ஏற்பட்டு உள்ளது. அவரது வாகன ஓட்டுனருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆம்புலன்ஸில் அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி போலீசார் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதிய நாடாளுமன்றத்தில் தேசிய சின்னம் திறப்பு

Mohan Dass

மறுமணம் மகிழ்ச்சிக்கு வித்திட்டுள்ளது: டி. இமான்

Halley Karthik

100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாய பணிகள்?

G SaravanaKumar