முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தெலங்கானா தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் – முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் சட்டப் பேரைவ கூட்டம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில், புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சட்ட மேதை அம்பேத்கர் பெயரை சூட்டக்கோரி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரி கே.டி.ராமாராவ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று அவர் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தெலங்கானா மாநிலத்திற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமை செயலகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டாமல் ஒன்றிய அரசு கட்டும் நடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறுவதா என்று அம்மாநில பாஜவினர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமை செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட பாலிகீட்ஸ் புழுக்கள்!

வாடகைக்கு இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர்!

Jeba Arul Robinson

புதியதாக 11 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா தொற்று

Halley Karthik