இந்தியாவில் கோடைகாலம் தொடங்கும்போது மின்சாரப் பயன்பாடு அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் ஏசி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின் தேவை உயர்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, கோடைகாலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளைத் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிடப்பட்ட டெண்டர் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைகால மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக வெளியிட்ட டெண்டர் திறக்கப்பட்டுள்ளது.
யூனிட் ஒன்றுக்கு ரூ.9.50 ரூபாய் முதல் ரூ.13 வரை விலைப்புள்ளிகள் பெறப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாதமும் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது …
Jan – ஒரு யூனிட் ரூ.13
Feb – ஒரு யூனிட் ரூ.9.50
Mar – ஒரு யூனிட் ரூ.10
Apr – ஒரு யூனிட் ரூ.10
May – ஒரு யூனிட் ரூ.9.95
June – ஒரு யூனிட் ரூ.13
இந்த குறைந்தபட்ச விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 2014 ம் ஆண்டுக்கு பிறகு விரைவில் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர் கோரப்படும்“.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




