முக்கியச் செய்திகள் விளையாட்டு

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு அறிவிப்பு

டென்னிஸ் உலகம் தன்னை உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டதாக ஓய்வை அறிவித்த பிறகு ரோஜர் பெடரர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்

செரீனா வில்லியம்ஸ் ஓய்வு பெறப்போவதாக அறிவித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மற்றொரு டென்னிஸ் ஜாம்பவான் தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். 41 வயதாகும் ரோஜர் பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அடுத்த வாரம் லாவர் கோப்பைக்கான போட்டிதான் தனது இறுதி தொழில்முறை போட்டியாக இருக்கும் எனக் கூறினார். பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் ஃபெடரர் திடீரென அவரது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த டென்னிஸ் உலகத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது ஓய்வு குறித்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ள ரோஜர் “எனக்கு 41 வயதாகிவிட்டது, எனது 24 ஆண்டுக்கால டென்னிஸ் பயணத்தில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட எனக்கு டென்னிஸ் உலகம் என்னை உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்குக் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற சவால்களை அளித்துள்ளது.என்னுடைய பழைய நிலைக்குத் திரும்புவதற்கு நான் கடுமையாக உழைத்தேன். இதன் மூலம் எனது உடலின் திறன்கள் மற்றும் வரம்புகளையும் நான் அரிந்தேன். என்னால் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது எனச் சமீபத்தில் எனக்குத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன் தற்போது என்னுடைய டென்னிச் பயணம் முடிவுபெறும் நேரம் வந்து விட்டதால் நான் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன்.எதிர்காலத்தில் அதிக டென்னிஸ் விளையாடுவேன், ஆனால் கிராண்ட்ஸ்லாம் அல்லது சுற்றுப்பயணத்தில் அல்ல.

மேலும் என்னுடைய பயணத்தில் எல்லா நேரத்திலும் எனக்குப் பக்கபலமாக இருக்கும் எனது மனைவி மிகவுக்கு நன்றி. என்னுடைய ஒவ்வொரு போட்டியின் முன்பும் என் மனைவி எனக்கு ஊக்கம் அளிப்பதில் தவறியதே இல்லை. என் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருந்த போதும் கூட நான் விளையாடும் போட்டிகளை நேரில் வந்து காண்பார். என்னைக் கடந்த 20 ஆண்டுகளாக நன்றாகக் கவனித்து வருகிறார்.அவருக்கு எனது நன்றி’ எனவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டில் பல மில்லியன்களை ஈட்டியுள்ள இவர், சம்பளம், பரிசுப்பொருட்கள் மற்றும் விளம்பரம் மூலமே இதுவரை சுமார் $550 மில்லியன் சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பரிசுத்தொகையாக மட்டுமே சுமார் $130 மில்லியனை பெற்றதோடு ஃபெடரர் பல பிரபலமான விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் அவருக்கு $300 மில்லியன் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2020 ஆண்டு உலகின் அதிக சம்பளம் வாங்கும் தடகள வீரராக உயர்ந்து, கடந்த 17 வருடங்களாக அதிக சம்பளம் வாங்கும் டென்னிஸ் வீரராகத் தரவரிசையில் உள்ளார்.

ஆனால் 2022ல் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக வலம் வந்த ரோஜர் ஃபெடரரின் ஓய்வு குறித்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பள்ளி மாணவிக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது!

Jeba Arul Robinson

’அதிகாரிகளை தாக்கிய திமுக எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – இபிஎஸ்

G SaravanaKumar

வேலைகளை உருவாக்குபவர்களையே நாங்கள் விரும்புகிறோம்-அமைச்சர் தர்மேந்திர பிரதான்

G SaravanaKumar