மல்லுக்கு நிற்கும் Amazon – Reliance நிறுவனங்கள்

Future Retail நிறுவனத்தை வாங்கும் முயற்சியில், அமேசான், ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய சந்தையாகத் திகழ்ந்து வருகிறது இந்தியா. வர்த்தகத்துறையில் கால் பாதிக்க விரும்பும் அனைத்து…

Future Retail நிறுவனத்தை வாங்கும் முயற்சியில், அமேசான், ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய சந்தையாகத் திகழ்ந்து வருகிறது இந்தியா. வர்த்தகத்துறையில் கால் பாதிக்க விரும்பும் அனைத்து நிறுவனங்களின் முதல் தேர்வாக இந்தியா இருந்து வருகிறது. இத்தகைய வர்த்தக துறையில் பெரும் நிறுவனங்களிடையே மோதல் நிகழ்வது வழக்கமான ஒன்று.

Future Retail என்பது பல சில்லறை விற்பனை நிறுவனங்களை தன்னகத்தே கொண்ட ஒரு பெரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் ஒரு பொருளை எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் தடம் பதித்திருக்கும் Reliance நிறுவனம், Future Retail நிறுவனத்தை, 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முடிவு செய்தது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு அமேசான் நிறுவனம் Future Retail நிறுவனத்துடன் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி Future Retail நிறுவனத்தை ரிலையன்ஸ் வாங்கும் முடிவை அமேசான் எதிர்த்தது. கார்ப்பரேட் நிறுவனங்களிடையே ஏற்படும் பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கும் Singapore International Arbitration Centre, இந்த விவகாரத்தில் Amazon நிறுவனத்திற்கு சாதகமாக முடிவெடுத்தது.

இந்தியாவில் வர்த்தகத்துறையின் சமநிலையை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவது Competition Commission of India (CCI). அமேசான் நிறுவனமானது, Future Retail நிறுவனத்துடன் 2019-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் சில தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. மேலும் சில விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது CCI. அதுமட்டுமின்றி, அமேசான் நிறுவனத்திற்கு 202 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமேசான் நிறுவனம், இந்த முடிவானது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்வதைத் தடுக்கும் விதத்திலும், ஆரோக்கியமான போட்டியைத் தடுக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகக் கூறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.