அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தரப்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர் மட்டம் 84.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6344 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படும். எனவே, அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.