சமீபத்தில் தனது சுதந்திர பறவையாக சுற்றி திரியும் அமலாபாலின் புகைப்படம் இணையத்தில் வைரல்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையே ஆண்களை சார்ந்து இருப்பது தான் என்று சொல்லும் கூட்டத்தை மிரள வைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பெண் தனக்கென்று சுதந்திரமாய் சுற்றி திரிவதைக் காண்கையில் பெருமை கூடுகிறது. பெண்களின் சராசரியான வாழ்க்கையையும் அனுசரிப்பையும் உடைத்தெறிந்து ஆணும் பெண்ணும் சமம் தான் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் நடிகை அமலாபால்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பெண்களின் சுதந்திரமே தங்களின் சுய மதிப்பை அறிய வைக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தைரியம், தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதற்குச் சான்றாக இப்புகைப்படம் அமைகிறது. சாதனைப் பெண்கள் பலர் வந்தாலும் இன்னும் பல பெண்களை வெளியே வரவிடாமல் தடுக்கின்ற அவலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒரு ஆண் அடையும் அதே வெற்றியை ஒரு பெண் அடைந்தால் ஏனோ நம்மை அறியாமல் நமக்குள் ஒரு கூடுதல் ஆனந்தம். இங்கு யாரும் பெண்களைக் கொண்டாடச் சொல்லவில்லை; அவர்களுடைய சுதந்திரத்தை பறிக்காமல் இருந்தாலே போதும்.
பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று போட்ட வட்டங்களை எல்லாம் நடிகை அமலாபால் சுக்குநூறாக்கி பைக்கில் பறப்பதை பார்க்கையில், நாமும் உற்சாகமாக எங்கோ பறந்து கொண்டுதான் இருக்கிறோம். ஆண்கள் ஸ்கூட்டி ஓட்டுவதை விசித்திரமாக பார்க்காத நாம், பெண்கள் பைக் ஓட்டுவதை விசித்திரமாக பார்க்கிறோம். அந்த பார்வையை முதலில் நிறுத்த வேண்டும்.
“WHEN A WOMEN REALISES WHAT SHE DESERVES SHE LOOKS MORE BEAUTIFUL”
பிரிந்த பின் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தூற்றி கொள்வதை விட நமக்கான வாழ்க்கை மிகப்பெரிது என சந்தோஷமாக பொழுதை கழிக்கும் அமலாபாலின் இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
– தீபா