அமாவாசையையொ முன்னிட்டு கொந்தளிப்புடன் காணப்பட்ட கடல்!

அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.  அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் ராஜபாளையம் கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகல்…

அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. 

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் ராஜபாளையம்
கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகல் முதல் கடல் கொந்தளிப்புடன் கடல் சீற்றமாக காணப்பட்டதால் கடல் நீர் கடற்கரையில் இருந்து சுமார் 60 அடி தூரம் வெளியே
வந்தது.

இதன் காரணமாக தாள முத்து நகர், ராஜபாளையம் கடற்கரைப் பகுதியில் தோமையார்
ஆலயம், கணவாய் கம்பெனி , கடற்கரை அருகே இருந்த டீ கடை, கடற்கரை அருகே மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் ஆகியவை கடல் நீரால் முற்றிலும் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
நாட்டுப்படகுகள் கடல் சீற்றம் காரணமாக ஒன்றோடு ஒன்று மோதும் நிலையும்
ஏற்பட்டுள்ளது.

பகலில் இந்த கடல் சீற்றம் காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும்
இரவு நேரத்தில் வந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.