மீனவர் நலனுக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், விவசாய விளைபொருள்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும். மீனவர் நலனுக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








