இணையவழி நீதிமன்றங்கள் அமைக்க ரூ.7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அவர் தெரிவித்ததாவது…
தேசிய டேட்டா தொடர்பாக அரசின் கொள்கை வெளியிடப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் அரசு துறைகளில் வரும் நாட்களில் பயன்படுத்தப்படும். டிஜி லாக்கர் முறை இனி பிரபலப்படுத்தப்படும். சிறு குறு நடுத்தர தொழில் துறையினருக்காக டிஜி லாக்கர் முறை விரிவாக்கம் செய்யப்படும்.
7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இ கோர்ட் எனப்படும் இணையதள நீதிமன்றங்கள் அமைக்கப்படும். 5ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
2070 ஆண்டுக்குள் ஜீரோ எமிஷன் நிலை எட்டப்படும்.இதற்காக தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு 19700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்ளுசூழல் மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றுவதற்கான திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் பங்களிப்போடு கூடுதல் நிதி ஒதுப்படும்.
மாங்குரோவ் காடுகள் பாதுகாக்கவும் அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் ஊழியர்கள் பணியாளர்கள் இதற்காக பயன்படுத்தப்படலாம். சிறு குறு நடுத்தர தொழில் பிரிவினரை மேம்படுத்துவதற்காக
9000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரோபோடிக் ட்ரோன் கேமிராக்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு வழங்கப்படும். தற்போது உள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் இந்த புதிய அமைப்புகளும் சேர்க்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு திட்டம் வழங்கவும் அதற்கு அவர்களுக்கு நிதி உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டை வளர்க்க நாடு முழுவதும் 30 மையங்கள் ஏற்படுத்தப்படும்.
நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும். “தேக்னா அப்னா தேஷ்”என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டுவரப்படுகிறது.
புதிதாக 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். மூன்று கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும். நாட்டின் எல்லையோர கிராமங்கள் மேம்படுத்தப்பட அதிக கவனம் செலுத்தப்படும்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை 76% அதிகரித்துள்ளது. தேசிய தரவு நிர்வாகக் கொள்கையின் கீழ் கேஒய்சி செயல்முறை எளிதாக்கப்படும். ” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
– யாழன்







