முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் கலக்கும் ஐஐடி இளைஞர்களின் கூட்டணி

இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து, இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, இதனால் அமெரிக்காவின் நாசாவும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

 

விண்வெளி துறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, பல அசாத்திய சாதனைகளை செய்து வருகிறது இஸ்ரோ. சிறந்த தொழில் நுட்பம், குறைந்த செலவு, நீண்ட கால பயன் என எல்லா வகையிலும் உலக நாடுகள் இந்தியாவின் இஸ்ரோவை வியந்து பார்க்கின்றன. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இடையே விண்வெளி ஆதிக்க போட்டி ஒரு முடிவுக்கு வந்து விட்டது போல் உள்ளது என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

சமீப காலமாக உலகளவில் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் வருகையும், வளர்ச்சியும் குறிப்பிடும் படியாக உள்ளது. அமெரிக்க அரசின் விண்வெளி நிறுவனம் நாசா, தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலமே செயற்கைகோள்களை அனுப்புகிறது. பொதுவாக ராக்கெட்டை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆனால், பேஸ்எக்ஸ் வடிவமைத்த தொழில்நுட்பம் மூலம் மீண்டும் செயற்கைகோள்களை செலுத்தமுடியும். இதனால் ராக்கெட் ஏவுவதற்கான செலவில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பேஸ் எக்ஸை போல், இந்தியாவிலும் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. தெலங்கானாவில் செயல்பட்டுவரும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தை சென்னை ஐஐடியில் படித்த பாரத் டாக்கா மற்றும் காரக்பூர் ஐஐடியில் படித்த பவன் சந்தனா, ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

முற்றிலுமாக இந்தியாவிலேயே வடிவமைத்த விக்ரம் எஸ் ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்கைரூட். வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த விக்ரம் எஸ் ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் எல்லா நிலைகளிலும் துல்லியமாக இலக்கை அடைந்தது. இந்திய விண்வெளித்துறையில், தனியார் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தகுந்த சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

 

இது தொடக்கம் தான். விக்ரம் எஸ் ராக்கெட்டை பயன்படுத்தி செயற்கைகோள்களை செலுத்துவது வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என ஸ்கைரூட் நிறுவனத்தின் சிரீஷ் பள்ளிகொண்டா கூறியுள்ளார். தங்கள் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்ப பலர் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்போது ஸ்கைரூட் நிறுவனம் விக்ரம் ராக்கெட்டில் மூன்று வெவ்வேறு வகைகளை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் அடுத்ததாக விண்வெளி துறையில் களமிறங்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இனி இஸ்ரோவின் தலைமையில், பல தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் போது, நாளைய நவீன அறிவியல் யுகமும், விண்வெளியும் நம் வசப்படும் என விண்வெளி ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்.

 

– ரா.தங்கபாண்டியன் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்கள் மீதான ‘மார்ஃபிங்’ மிரட்டல்கள் – தற்கொலை தீர்வல்ல!

பவர் பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்து புவனேஷ்வர் குமார் சாதனை!

Web Editor

திமுக எம்.எல்.ஏ மோகன் விடுதலை!

எல்.ரேணுகாதேவி