விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் – VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க…

விவிபேட் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் – VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில்,  வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.