கேரள மாநிலம், இடுக்கியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் பண்ணைகளில் உள்ள பன்றிகளை கருணைக் கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த நில மாதங்களுக்கு முன்பு பரவலாக பன்றிக் காயச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் இடுக்கியில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வத்திக்குடி ஊராட்சியின் 15 ஆவது வார்டில் உள்ள படமுகா பகுதியில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணைகளில் இருக்கும் பன்றிகளை கருணைக் கொலை செய்ய இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள 230 பன்றிகளில் 170 பன்றிகள் காய்ச்சலால் இறந்த நிலையில் மீதமுள்ள பன்றிகளையும் கொலை செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றிகள் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








