“பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது” – பாமக நிறுவனர் ராமதாஸ்

பொது சிவில் சட்டத்தை பாமக தொடர்ந்து எதிர்த்து வருகிறது எனவும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்…

பொது சிவில் சட்டத்தை பாமக தொடர்ந்து எதிர்த்து வருகிறது எனவும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் ராமதாஸ் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க கோரி தமிழக முதல்வரிடம் நான்கு முறை தொலைபேசியில் பேசி உள்ளேன். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பாமகவும் தமிழக அரசும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

ஒரு சொட்டு மது இல்லாத மாநிலமாக தமிழகம் மாறவும், ஒரு சொட்டு நீர்கூட கடலில் கலக்கக்கூடாது என்று கடவுளிடம் வரமாக கேட்பேன் என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசு கொண்டு வரும் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தெரிவித்த ராமதாஸ், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதாக கூறினார்.

நிகழ்ச்சியில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட,
ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.