செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டியில் அகரம் அண்ணாசெலக்ட் கபடி அணி வெற்றி பெற்று கோப்பை தட்டி சென்றது.
அமெச்சூர் கபடி கழகம் மற்றும் முடிச்சூர் ஸ்போர்ஸ் கிளப் இணைந்து நடத்திய மாபெரும் 2 நாள் மின்னொளி கபடி போட்டி தாம்பரம் அடுத்த முடிச்சூரில் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டனர். 3 சுற்றுகள் நாக் அவுட் முறையிலும், 3 சுற்றுகள் லீக் முறையிலும் நடைபெற்றன.
இதில் ஆண்கள் பிரிவில் இறுதி போட்டியில் அகரன் அண்ணா செலக்ட் கபடி அணியும், திருமுடிவாக்கம் டி.எஸ்.சி கபடி அணியும் மோதின. இதில் அகரம் அண்ணா செலக்ட்
அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
பெண்கள் பிரிவில் கண்ணகிநகர் யுனிவர்சல் ஸ்போர்ட் அணியினர் வெற்றி பெற்றனர். மேலும் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பையும்
ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.







