ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1 மாத காலமாக பூட்டிக்கிடக்கும் இசேவை மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஆலங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஆலங்குளம்
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இசேவை மையம் செயல்பட்டு வந்தது. புதிய ஆதார் கார்டு பெற விண்ணப்பிப்பது, ஆதார் கார்டு திருத்தம் உள்ளிட்டப் பல்வேறு
சான்றிதழ் பெறும் பணிக்காக மக்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். கடந்த ஒரு மாதமாக இந்த இசேவை மையம் பூட்டி கிடக்கிறது. இங்கு பணியாற்றிய ஊழியர் வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்கு மாற்று பணியாளர் நியமிக்கப்படாததால் இந்த இசேவை மையம் பூட்டி கிடக்கிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் இங்கு
வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கையாக உள்ளது.
ஆலங்குளம் தென்காசி சாலையில் உள்ள போஸ்ட் ஆபீசில் ஆதார் கார்டு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க குறைவான
நாட்களே உள்ள காரணத்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிக்க தவித்து வருகின்றனர்.
ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பூட்டி கிடக்கும் இசேவை மையத்தை உடனடியாகத் திறந்து தினமும் இங்கு ஆதார் உள்ளிட்ட பணிகள் நடைபெற தென்காசி மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
—ரெ.வீரம்மாதேவி
பூட்டிக் கிடக்கும் இ-சேவை மையம் திறக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் ஏக்கம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: