ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில்
காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு
நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டியில் காளியம்மன்
கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த
ஜல்லிக்கட்டை, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கொடியசைத்து
தொடங்கி வைத்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக, புதுக்கோட்டை வருவாய்
கோட்டாட்சியர் முருகேசன் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க, வீரர்கள்
அதை ஏற்றுக் கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர்
மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 788 காளைகளும், 240
மாடுபிடிவீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக
காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வருவதை, காளையர்கள் மல்லுக்கட்டி
தழுவி வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை தழுவிய காளையர்களுக்கும், காளையர்களின்
பிடியில் சிக்காமல் செல்லும் காளைகளுக்கும் கட்டில், பிரோ, டைனிங் டேபுள்,
சில்வர் பாத்திரங்கள், பேன், மிக்ஸி, குக்கர், கிரைண்டர் மற்றும் ரொக்கப்பணம்
உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், காளைகள் மருத்துவ
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டது.

அதேபோல் மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே, காளைகளை
தழுவ அனுமதித்தனர். மேலும், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் 108
ஆம்புலன்ஸ் நிறுத்தப்படாததால், காயம் அடைந்தவர்களை மருத்துவ குழுவினர்
வந்த வாகனங்களில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட
காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதே போல் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வருவாய்த்துறை மற்றும்
தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில், இந்த
ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. மேலும், இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார
பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

—-கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.