மதுரை அழகர்கோயிலில் ஆடி திருவிழா ஆலயத்தின் உட்பிறகாரத்தில் வைத்து நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர்கோயில் ஆடி திருவிழா வரும் 15 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதிவரை 11 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக ஆடிதிருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் விழா நடைபெறும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக மட்டும் அனுமதிக்கப்படுவர் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரும் 24 ஆம் தேதி ஆடி பௌர்ணமி அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு, மாலையில் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் மறு உத்தரவு வரும் வரை ஆலயத்தில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கவும், மலை மீதுள்ள நூபுர கங்கையில் தீர்த்தமாடவும் தடை தொடர்வதால கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.








