மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற இருக்கிறது.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. இந்த விழாவானது கடந்த 23ஆம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக, கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர் சேவை நேற்று நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு கள்ளழகருக்கு ஆண்டாள் மாலை சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு கோயில் ஆடி வீதியில் உள்ளரங்க விழாவாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தை போன்று தத்ரூபமாக செட் அமைத்து செயற்கையாக வைகை ஆறு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை வைகை ஆற்றில் இன்று காலை குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். இந்தத் திருவிழாவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.







