சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் 50வது பிறந்தநாளை, விலை உயர்வை குறிக்கும் வகையில் அக்கட்சியினர் தக்காளி வடிவ கேக் வெட்டி கொண்டாடினர்.
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் பிறந்தநாள் விழா இன்று ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக வாரணாசியில் பொதுமக்களுக்கு தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னையை முன்னிலைப்படுத்த தக்காளி விநியோகம் செய்ததாக சமாஜ்வாதி கட்சியினர் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கட்சித் தொண்டர்கள் தக்காளி போன்ற வடிவிலான கேக்கினை வெட்டியும் விழாவை கொண்டாடினார்கள். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூன் 23-ம் தேதி குவிண்டால் ஒன்றுக்கு ₹ 850 க்கு விற்கப்பட்ட தக்காளி, ஜூன் 24-ம் தேதி ரூ. 3,000 ஆகவும், ஜூன் 27-ஆம் தேதி குவிண்டால் ஒன்றுக்கு ₹ 4,000 ஆகவும் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கோயம்பேடு மற்றும் ஹைதராபாத்தில் தக்காளி விலை கிலோ ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி சாஸின் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வுக்கு பயிர் உற்பத்தி மற்றும் போக்குவரத்து தளவாடங்களில் மழையின் தாக்கமே காரணம் என மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.